மனித வாழ்வியலும் மறுமையும்..!!

தற்கால முஸ்லிம் சமூகத்தில் தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துகள் குறித்த விழிப்புணர்வு மேலோங்கியுள்ள நிலையில், இஸ்லாம் கூறும் வாழ்வியல் நெறிகளின்படி அவர்களின் வாழ்கையை முறைபடுத்திக்கொள்ள வெகு சிலரே முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.


இதற்கான முக்கிய காரணி மறுமை குறித்த அச்சமின்மையே ஆகும். இறைவன் மனிதனுக்கு அருளிய வளங்களையும் அவனது ஆயுளையும் எவ்வாறு செலவழித்தான் என்று மறுமையில் இறைவனிடம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டியவனாக இருக்கிறான் என்பதை மறந்து உலகின் வனப்பில் மறுமையை மறந்துவிடுகிறான்.

இறைநம்பிக்கையாளனாக தனது வாழ்வின் நோக்கத்தை புரிந்து, அதன் அணைத்து அம்சங்களையும் இஸ்லாத்தின் அடிப்படைகளின்படி அமைத்துகொள்வதே அவனுக்கு மறுமை வெற்றியை பெற்றுதரும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 20, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOedm5jQVVaN0Z4eEk


மானம் காப்பதும் மனித உரிமையே..!!ஒரு மனிதன் பல்வேறு காலகட்டங்களில் சிலரது தனி மனித குறைகள் மற்றும் தவறுகளை பிரர் முன் கூறி அவரை சிறுமை படுத்துவதும் அவரது மானத்தை பறிக்கும் விடயமே.

ஒரு இறைநம்பிக்கையாளன் தனது சகோதரனின் குறைகளை யாருக்கும் தெரியாது மறைத்து வைப்பதன் மூலம் அவருக்கு மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட ஓர் பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்த பலனை பெற்றுதரும். அப்படி நடப்பதன் மூலம் அந்த மனிதன் தன்னை திருத்திக்கொள்ள நல்ல சந்தர்ப்பத்தையும் இறைவன் வளங்கிடக்கூடும். பிற முஸ்லிமின் மானத்தைக் காப்பது ஒவ்வோர் முஸ்லிமுக்கும் கடமையாகும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 13, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

சோதனை மேல் சோதனை..!!மனிதன் தனது வாழ்நாளில் சிறியது முதல் பெரியதாக பலவித சோதனைகளை சந்திப்பதே வாழ்வின் நியதி. ஒரு முஃமீன் தனக்கு வரும் சோதனைகளை எவ்வாறு கருத வேண்டும் அதனை வென்றெடுக்க இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறைகள் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 06, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

ஆடம்பர சமூகமும் அதன் அவல நிலையும்..!!


மத்திய கிழக்கு நாடுகள் முதல் தற்போது பர்மா வரை முஸ்லிம் சமூகம் பல வகையான அழிவுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கிறது அன்றாட செய்தியாய் கேட்டும் கண்டும் வருகிறோம்.

இப்படி முஸ்லிம் சமூகம் உலகம் முழுவதும் அடக்குமுறைகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாவதன் காரணம் வெறுமனே பெரும்பான்மை முஸ்லிமல்லாத சமூகத்தின் அதன்மீதுள்ள வெறுப்பா அல்லது அதனையும் தாண்டியதா என ஆழ்ந்து சிந்தித்தால், அதற்காண காரணமாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, முஸ்லிம் சமூகத்தில் நிலவும் ஒற்றுமையின்மை, மற்றொன்று முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றிவிட்ட ஆடம்பரங்களும் அனாச்சாரங்களும் என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: செப்டம்பர் 29, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeb3dJZEtZa3JDMVk


தலாக்கும் அதன் முறைமைகளும் - Part 2..!!


இந்திய இஸ்லாமிய சமூகம் தங்களது வாழ்வியல் விவகாரங்களில் இஸ்லாமிய ஷரியத்தை முழுவதும் அறிந்துகொள்வதுடன் அதனை தங்களது வாழ்வில் முழுவதுமாக பின்பற்றி நடந்திட வேண்டும் என்பதையும், அப்படியான வாழ்வியல் விவகாரங்களில் ஒன்றான மணவிலக்கு எனும் தலாக்கின் இஸ்லாமிய முறைமை குறித்தும் அதனை செயல்படுத்தும் விதம் குறித்தும் சென்ற வார ஜுமுஆ சிறப்புரையில் விரிவான சிந்தனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக தலாக் எனும் மணவிலக்கும் சட்டம் மற்றும் முறைமைகளும் அதனை செயல்படுத்துதல் குறித்தும் விரிவான விளக்கத்தை தரும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மே 5, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOebTBqR0NKQkhPOEU


தலாக்கும் அதன் முறைமைகளும் - Part 1


தற்கால இந்திய சூழலில் முஸ்லிம்களும் அவர்களின் அடிப்படை உரிமையான வாழ்வியல் விவகாரங்களில் இஸ்லாம் கூறும் கோட்ப்படுகளின் அடிப்படையில் செயல்படுவதும் பிற்போக்குத்தனம் என்றும் சமகால வாழ்வியலுக்கு ஒத்துவராத ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சில மேற்கத்திய சிந்தனைகொண்ட முஸ்லிம்களும் இதே சிந்தனைகொண்டு இருப்பதும் இன்றைய முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் சவாலான ஓர் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமிய சமூகம் தங்களது வாழ்வியல் விவகாரங்களில் இஸ்லாமிய ஷரியத்தை முழுவதும் அறிந்துகொள்வதுடன் அதனை தங்களது வாழ்வில் முழுவதுமாக பின்பற்றி நடந்திட வேண்டும். அப்படியான வாழ்வியல் விவகாரங்களில் ஒன்றான மணவிலக்கு எனும் தலாக்கின் இஸ்லாமிய முறைமை குறித்தும் அதனை செயல்படுத்தும் விதம் குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ தொடர் சிறப்புரையின் முதல் பகுதி.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரல் 28, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

முஸ்லிம் தனியார் சட்டமும் நாமும்..!!இந்திய அரசியல் சாசனம் தந்து குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்று தங்களது மதம் கூறும் கோட்ப்படுகளின் அடிப்படையில் தங்களது தனியார் சட்டங்களை அமைத்துக்கொள்ளக்கூடிய உரிமையாகும்.

தற்போதைய பஜக அரசு பதவியேற்றது முதல் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையை குறிவைத்து அதனை பறித்திடும் வகையிலும் அதனை மக்களுக்கு எதிரானதாக சித்தரிக்கும் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் முஸ்லிம்கள் இந்த தனியார் சட்டங்கள் குறித்து சமூகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அந்த சட்டங்களை மதித்து தமது வாழ்வியலில் முழுமையாக செயல்பாட்டில் கொண்டுவந்திட முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 21, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

சமூகப்பொறுப்புணர்வும் தலைமையும்..!!இந்திய முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை கடந்த வார ஜுமுஆ உரையின் தொடர்ச்சியாக, நம் சமூக தலைவர்கள் தங்களது செயல்பாட்டினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 14, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

சமூகப்பொறுப்புணர்வும் நாமும்..!!


இந்திய முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 7, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeV2RMVnBBOTFwV0U


விமர்சனங்களுக்கான பதில் நற்குணத்தை கொண்டு..!!பன்னெடுங்காலமாக இஸ்லாம் மீதும் இஸ்லாமிய சமூகம் மீதும் எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் வசைகளுக்கும் இஸ்லாமிய சமூகம் பல்வேறான முறைகளில் எதிர்வினையாற்றி வந்திருக்கிறது. அது, உணர்ச்சிவசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுதல் முதல் திரும்ப தரம்தாழ்ந்த வசைகளை கொடுப்பதுவரை என பல வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நபிகளார் (ஸல்) அவர்கள் மீதான அல்லது இஸ்லாம் மீதான விமர்சனங்களுக்கான அவர்களது எதிர்வினை அவரது நல்லொழுக்கம் மற்றும் நற்குணத்தை கொண்டே பதில் வழங்கினார். அதனை பின்தொடர்ந்தே இஸ்லாமிய சமூகமும் நற்குணத்தையும் ஒழுக்க விழுமியங்கள் கொண்டே விமரசனங்களுக்கான பதில்களை வழங்கிட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 31, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeRE1qNlZudXI5M0k

தண்ணீர் சேமிப்பு..!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது பள்ளியில் தொழுகைக்காக ஒழுசெய்ய மட்டும் வாரம் சுமார் 10,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தபடுகிறது
கோவையில் 100 பள்ளிகளுக்கு மேல் உள்ளது சுமார் ஒருநாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கோவை நகர் பகுதிகளில் ஒழுசெய்யபட்ட தண்ணீர் சாக்கடையில் கலந்து கொண்டு இருக்கிறது
தற்போதய வறட்சியால் நகர் பகுதி பள்ளிவாசல்களில் ஒழு செய்ய கூட தண்ணீர் இல்லமால் தண்ணீர் வெளியே விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை நம் பகுதிகளிலும் ஏற்பாடாமல் இருக்கவும், கோடை கால வறட்சியை சமாளிக்கவும், நாம் கோவை மாநகரின் நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், நாம் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.
அந்த வகையில், நம் பள்ளியில் ஒழுசெய்யும் தண்ணீரை பூமிக்கு அடியில் செலுத்துவதால் நம் பகுதியின் நீர்மட்டம் உயரும். நம் பள்ளிவாசலில் இவ்வகையில் 5 அடி விட்டதில், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் நீரை சுத்தம் செய்ய (RAIN WATER HARVESTING SYSTEM) RWH சுத்திகரிப்பு முறையில் தேவையான கற்கள், இன்னும் அதற்க்கு தேவையான பொருள்களை இட்டு வேலை நடைபெற்று வருகின்து. இதனால் நம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
கோவையில் முதல் முறையாக ஒழு செய்யும் தண்ணீரை சேகரிக்கும் முறை நம் பள்ளியில் துவங்கி உள்ளோம்.
இறைவனின் அருட்கொடையான நீரை சாக்கடையில் கலந்து விரயம் ஆகாமல் மீண்டும் அந்த நீரை மக்களின் பயன்பாடிற்க்கும், பள்ளியின் பயன்பாடிற்க்கும் தூய்மையாக வழங்கும் முயற்சியில் நமது ஜமாஅத் முயற்சி எடுத்துள்ளது.
அடுத்தக்கட்ட முயற்சியாக கோவை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா, ஒப்பணகார வீதி அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல், RS புரம் குர்ரதுல் அயன் பள்ளிவாசல்களில் தண்ணீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது
இந்த தண்ணீர் சேகரிப்பு முறை கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இப்படிக்கு,

மஸ்ஜிதுல் இஹஸான் நிர்வாகம்
தினமலர் வலைதளத்தில் ஒளிபரப்பப்பட்ட காணொளி...
http://www.dinamalar.com/video_main.asp?news_id=92367&cat=32