Masjidhul Ihsaan - Coimbatore

பெண்ணுரிமையும் அவர்களது சமூகக் கடமையும்..!!

(ஜைனப் அல்-கஸ்ஸாலி)

எப்பொழுதெல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் அவலம் குறித்து மற்றவர்கள் பேசுகிறார்களோ, அப்பொழுதெல்லாம் இஸ்லாம் பெண்களுக்கு எல்லாவித திருமண விலக்கு, வாரிசுரிமை உட்பட எல்லா சமூக உரிமைகளையும்  வழங்கியிருக்கிறது என்று ஒரு சிலரே அவர்களுக்கு பதிலளிக்கிறார்கள். ஆனாலும், நடைமுறையில் அவர்கள் கூறும் விளக்கத்திற்கு ஏற்றார்போல்தான் இந்த சமூகம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ளதா என்று பார்த்தால் அது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.


(மர்வா அல்-ஷேர்பினி)

இப்படிப்பட்ட சூழலில் நபி (ஸல்) அவர்கள் கட்டமைத்த அந்த இஸ்லாமிய சமூகத்தில் பெண்களுக்கும் சரிநிகர் பங்கு வழங்கப்பட்டது என்பதையும், அப்படி தங்களது உரிமைகளையும் கடமைகளையும் உணர்ந்த சஹாபியப் பெண்கள் இன்றும் ஆண்களுக்கு நிகராக போற்றப்படுவதையும் காண்கிறோம்.

எப்படி இஸ்லாமிய சமூகத்தின் சிந்தனை கிலாபத் வீழ்ச்சிக்குப்பின் பள்ளிவாசல்களுடனும் வழிபாடுகளின் தொகுப்பாகவும் மாறிப்போனதோ, அதனைப்போலவே எப்போது பெண்கள் பள்ளிவாசல்களுக்கு வந்து மார்க்க ஞானங்களை கற்றுக்கொள்ள இருந்த அந்த ஓர் வாசலையும் அடைத்து அவர்களை தீய வழிகளின் பக்கம் திருப்பிவிட்டதால் இன்று சமூகத்தின் கரு எனக்கருதப்படும் குடும்பங்களும் சிதைந்து அதன் விளைவாக சமூகமும் பலவீனப்பட்டு இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க, அக்கால சஹாபியப் பெண்களைப்போலவே இன்றளவும் இஸ்லாமிய சமூக கட்டமைப்பை புனரமைப்பதற்காக உலகின் பல்வேறு மூலைகளிலும் ஒரு சில பெண் ஆளுமைகள் பாடுபட்டுக்கொண்டிருப்பதையும் நாம் காணமுடிகிறது. அப்படிப்பட்ட ஆளுமைகள் சிலரைக்குரித்தும், அவர்களைப்போன்ற ஆளுமைகளை உருவாக்குவதன் அவசியத்தையும், அதன் மூலம் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யும் வேலையையும் முன்னெடுக்க வேண்டும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: செப்டம்பர் 11, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்