Masjidhul Ihsaan - Coimbatore

சீர்திருத்தமும் நன்மையை ஏவுதலும்-100215..!!


"மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது." -- அல்-குர்ஆன் (13:22) 

நம் நாட்டில் இன்றைய சமூக சூழல் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது. சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சியும், தீமைகள் தளைத்தோங்கிக்கொண்டும் இருக்கிறது. இந்த சமூக சுனாமியில் மிகவும் பாதிப்பிற்க்குள்ளவது பெண்களும் நம் இளைய சமூகமும் தான். இன்றைய பெண்கள் மற்றும் இளையதலைமுறையினரிடம் போதையும் ஒழுக்ககேடுகளும் பண்பாடு என்ற ரீதியில் பரப்பப்பட்டு அதில் அவர்கள் முழுவதுமாக தங்களை தொலைத்துக்கொள்கிறார்கள்.

இத்தகைய சமூக சீர்கேட்டிற்க்கு நம் முஸ்லிம் சமூகமும் படிப்படியாக வீழ்ந்துகொண்டிருக்கிறது. நம் சமூகத்திலும் இந்த சமூகத்தீமைகள் நாளுக்குநாள் அதிகமாக வேரூன்றிக்கொண்டிருக்கிறது. நம் இளைய சமூகத்தை சிறுகச்சிறுக அது செள்ளரித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே பலவிதமான தாக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் இன்றைய முஸ்லிம் சமூகம் ஆட்படுத்தப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக ஒழுக்க விழுமியங்களை சீரமைப்பதும் அதற்காக ஒவ்வோர் தனிமனிதனும் உழைப்பதன் அவசியத்தையும், அப்படி சீரமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டு சமூகத்தீமைகளை களைய முற்படுவோர் நன்மையான விசயங்களின் பால் மக்களை அழைக்கவும் வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: அக்டோபர் 2, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்: