Masjidhul Ihsaan - Coimbatore

சமூக சேவை ஏற்படுத்திய தாக்கங்கள்..!!


தமிழகத்தின் தலைநகர் சிங்காரச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் சமீபத்திய பெருமழையினால் தத்தளித்து வருகிறது. இந்த தருணத்தில் முஸ்லிம் அமைப்புகள் மத, ஜாதி, மொழி என்ற எந்த பாகுபாடின்றி இரவு பகல் பாராமல் மீட்ப்புப்பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மற்றும் பால் போன்ற அத்தியாவிசய பொருட்களை வழங்குவதிலும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.



இந்த மனிதநேய செயல்பாட்டால் பெருமளவு முஸ்லிம்கள் மீது ஊடகங்கள் மற்றும் பிரிவினைவாத சக்திகளினால் ஏற்படுத்தப்பட்ட பிம்பம் பாதிக்கப்பட்ட மக்களின் மனதிலிருந்து அகன்று முஸ்லிம்களை சகோதர வாஞ்சையுடன் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

மனிதநேயம் கொண்ட தொண்டின் மூலமே மனிதகுலத்திற்கு இறைவன் காட்டித்தந்த இந்த மார்க்கத்தின் அவசியத்தை பிறருக்கு புரியும்படி எடுத்துவைக்க முடியும் என்பதனையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. எவ்வித பேதமின்றி சுயநலம் பாராத சமூக சேவையின் மூலமே இஸ்லாமிய மாண்புகளை பிறமக்களுக்கு முன் சிறப்பாக அறிமுகப்படுத்திட முடியும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 4, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்