Masjidhul Ihsaan - Coimbatore

போராட்டமும் மேலோங்குதலும்..!!


இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டு, இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் பல்வேறு எதிர்ப்புகளையும் சோதனைகளையும் சந்தித்தும் அதனை வென்று தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. தற்கால இஸ்லாமிய சமூகத்திற்கும் இன்று தேச சர்வதேச அளவில் அதற்க்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகளை எதிர்கொள்வதற்கு ஓர் சிறந்த படிப்பினையாகவுள்ளது.

இறுதிவரை போராட்டம்..!!



ஓர் முஸ்லிம் தனது வாழ்வில் சில தருணங்களில் தனது செயல்பாட்டை இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையிலிருந்து சிறிதும் பிசகாமல் கடைபிடிப்பதும், மேலும் சில தருணங்களில் இஸ்லாமிய வழிமுறை குறித்து கண்டும்காணாமல் விட்டுவிடும் போக்கை நாம் கண்கூடாக காணமுடிகிறது.

செயல்பாடுகளும் வழிமுறைகளும்..!!

ஓர் மனிதன் இவ்வுலகில் செய்யும் செயல்கள் மற்றும் அதன் விளைவுகள் அந்த செயலை அவன் செய்யும் வழிமுறையினை அடிப்படையாகக்கொண்டே அமைகிறது.

இறைவனின் அருள்வளங்களும் நமது கைமாறும்..!!


இறைவன் நம்மை மனிதகுலத்தில் அதுவும் முஸ்லிம்களாக, ஏக இறைவைனை மட்டுமே வணங்கி அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழக்கூடிய நர்ப்பேரை வழங்கியுள்ளான். அவன் நமக்கு நம் வாழ்நாள் முதல் உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்தினையும் நமக்கு அவனது அருளாக வழங்கியுள்ளான்.

இறைவன் வழங்கிய அருள்வளங்களை எல்லாம் ஆண்டு அனுபவிக்கும் நாம், அவன் நமக்கு கட்டளையிட்டுள்ள செயல்களில் தலையாய ஒன்றான “இஸ்லாமிய” மார்க்கத்தை மேலோங்கிட செய்யும் அரும்பணியில் எவ்வாறு செய்லபடுகிறோம் என்பதனை மீளாய்வு செய்யும் விதமாகவும், மார்க்கத்தை மேலோங்கிட செய்யும் பணியில் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: பிப்ரவரி 5, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOealdZODR5cGhqVFE