Masjidhul Ihsaan - Coimbatore

இறுதிவரை போராட்டம்..!!



ஓர் முஸ்லிம் தனது வாழ்வில் சில தருணங்களில் தனது செயல்பாட்டை இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையிலிருந்து சிறிதும் பிசகாமல் கடைபிடிப்பதும், மேலும் சில தருணங்களில் இஸ்லாமிய வழிமுறை குறித்து கண்டும்காணாமல் விட்டுவிடும் போக்கை நாம் கண்கூடாக காணமுடிகிறது.

மனித வாழ்வினைக் குறித்து இறைவன் தன் திருமறையில் கூறும்போது, இறப்பையும் பிறப்பையும் நாம் படைத்தது யார் அழகிய செயல்களை புரிகிறார்கள் என்பதை சோதிக்கவே எனக் குறிப்பிடுவதை காணமுடிகிறது.

மனிதனின் செயல்பாட்டில் நன்மையையும் தீமையையும் எடுத்துரைக்கும் ஓர் உன்னத அருட்கொடையை இறைவன் மனிதனுக்கு, “மனசாட்சி” அல்லது இறைவனது பார்வையில் “இடித்துரைக்கும் மனது” என்ற ஒன்றை இயற்கையிலேயே வழங்கியுள்ளதைக்கொண்டு தனது செயல்பாடுகளை எவ்வாறு இறைவனது உவப்பை பெறக்கூடிய வகையில் செலுத்துவது என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: பிப்ரவரி 19, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOebmY3OFJFd0sxTkE/view