Masjidhul Ihsaan - Coimbatore

சூரா அல்-அஸ்ர் விளக்கவுரை..!!


கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் ஞாயிறு தோறும் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இந்த வாரம் சூரா அல்-அஸ்ர் (அத்தியாயம் 103)-ன் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

உரை:  மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஆகஸ்ட் 14, 2016

உரையை கேட்க்க கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..


பொது சிவில் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும்-081216..!!



இந்திய தேசிய அளவிலான மக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தினை வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய சட்ட கமிஷனுக்கு மத்திய பஜக அரசு ஆணை பிறப்பித்துள்ள சூழலில். சங்பரிவார்கள் பொது சிவில் சட்டம் என எதனை முன்வைக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டால், இவ்வாறான சட்டம் கொண்டு வருவதன் மூலம் சமூக அளவில் அடித்தட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பிடுங்குவதாகவே அமையும் என்பதை உணரமுடிகிறது.

இந்த சூழலில் பொது சிவில் சட்டம் குறித்து தெளிவான கருத்தியலை உருவாக்குவதும் மேலும் இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்ற நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பாதுகாத்திட முஸ்லீம்கள் மேற்க்கொள்ளவேண்டிய பணிகளின் அத்தியாவசிய தேவையை உணர்த்தும் சிந்தனையைத் தூண்டும் ஜுமுஆ தொடர் உரையின் நான்காம் பாகம்.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 12, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

அப்பாவிகள் கைதும் இஸ்லாமிய நீதியும்-080516..!!



தற்கால தேசிய மற்றும் சர்வதேச நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அரச இயந்திரத்தின் மூலம் குறிப்பிட்ட சமூகம் மற்றும் பிரிவினர் தேச விரோதிகளாகவும் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கப்பட்டுவரும் அதே நேரம், குற்றம் சுமத்தப்படும் நபர் பல்வேறு இன்னல்கள் மற்றும் சமூக புறக்கநிப்பிர்க்குபின் நிரபராதி என விடுதலை செய்யப்படும் சூழலில் அவருக்கு தக்க நிவாரணம் வழங்கப்படுவதில்லை.

இத்தகைய சூழலில் தற்போதைய சட்டங்களின் பலகீனங்களையும் அதற்க்கு மாற்றான இஸ்லாமிய சட்டங்களின் நீதத்தின் சாரங்களை விளக்கிடும் ஜுமுஆ தொடர் உரையின் மூன்றாம் பாகம்.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 5, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்