Masjidhul Ihsaan - Coimbatore

சீர்கேட்டின் உச்சம் காதல்..!!



கோவை நகரைச்சேர்ந்த முஸ்லிம் பட்டதாரி யுவதி காதல் வயப்பட்டு இறுதியில் அவருடைய உயிரையே பறித்திட்ட சம்பவம் செய்தி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் மேலோட்டமாக வெளியிடப்பட்டது. பொதுவில் கல்வி குறித்து அதிக கவணம் செலுத்தாத ஓரு சமூகம் இன்று பெண்களின் கல்வி குறித்தும் அதன் அத்தியாவசிய தேவை குறித்தும் உணர்ந்து அதனை செயலாக்கம் செய்துவரும் இந்த தருணத்தில் இவ்வாறான நிகழ்வுகள் பெண்களுக்கு அந்த சமூகம் வழங்கிவரும் கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தினையும் பறித்திடும் வகையில் அமைந்துவிடுகிறது.

இவ்வாறான காதல் ஆண்-பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒழுக்க சீர்கேடாகவே இருக்கிறது. இளம் தலைமுறையினருக்கு இதனைக்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களது கடமைகளை அவர்களுக்கு உணர்த்துவதும், இறைவன் மீதான நம்பிக்கை மற்றும் மறுமை குறித்த அச்சத்தையும் அவர்கள் மனதில் ஆழவிதைப்பதுமே இந்த சீர்கேட்டில் இருந்து அவர்களை காத்திட நாம் மேற்கொள்ள வேண்டிய கடமை என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 27, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்