Masjidhul Ihsaan - Coimbatore

கருத்துச்சுதந்திரம்..!!



இன்றைய கால சூழலில் முஸ்லிம் சமூகம் பொதுவில் மற்ற பிரிவினர் மீதான கருத்துகளுக்கு ஆர்ப்பறித்திடும் அதேசமயம், முஸ்லிம் சமூகத்தின்மீதோ அல்லது இஸ்லாத்தின்மீதோ எதிர்கருத்துகள் வரும்போது அதன் தன்மையை உணராது அதனை எதிர்ப்பதும் அன்றாட நிகழாவாக மாறியிருக்கிறது.

இந்த சூழலில் இஸ்லாம் நமக்கு கற்றுதரும் கருத்துச்சுதந்திரம் என்பது மனித உரிமை மட்டுமல்லாது இறைநம்பிக்கை சார்ந்த ஒன்றாகவே இருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளாக நபிகளார் அவர்கள் பத்ரு போர்க்களத்தில் தம் சாமானிய தோழர்களில் ஒருவர் கூறிய கருத்திற்கேற்ப கிணற்றை கைப்பற்றியது முதல், தனது விருப்பத்திற்கு மாறாக உஹதில் போர் புரிய சென்றதும், அதனைப்போலவே பல்வேறு தருணங்களில் தனது தோழர்களின் அறிவுரைகளை பெற்றுக்கொண்டதும் நமக்கு படிப்பினையாக அமைந்துள்ளது.

இதனை மனதில்கொண்டு தற்போதைய முஸ்லிம் சமூகம் அது பெரும்பான்மையாக இருந்தாலும் சரி சிறுபான்மையாக இருந்தாலும் சரி மக்களின் கருத்துச்சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதுடன் அதனை பாதுகாப்பதும் அதன்மீதான கடமை என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை. 

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 3, 2017

உரை: Dr. முஹிய்யுத்தீன் (சென்னை)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்