Masjidhul Ihsaan - Coimbatore

மௌலூதும் இஸ்லாமிய ஆன்மீகமும்..!!



ஆண்டுதோறும் ரபிய்யுல் அவ்வல் மாதம் நபிகளாரின் மீது புகழ்மாலை பாடுவதனால் தங்களின் நபிநேசத்தை வெளிப்படுத்துவதாகவும் அதன் மூலம் மறுமையில் பயன் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இஸ்லாமிய ஏகத்துவ கோட்பாட்டின் அடிப்படையினையே பலகீனப் படுத்தும் விதமாக ஒருசாரார் நடந்துகொள்கின்றனர். தௌஹீத் சிந்தனைப்போக்கு கொண்டு இந்த மௌலூது கலாச்சாரத்தை கடுமையாக எதிர்க்கிறோம் எனும் பெயரில் ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றும் செயலின் உச்சமாக பள்ளியின் பாங்கு சொல்ல பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியில் மற்ற நேரங்களைவிட அதிகமான சப்தத்துடன் இந்த மௌலூது ஓதுவது ஆங்காங்கே நடந்துவருகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் புரையோடிப்போயுள்ள இப்படியான அனாச்சாரங்களை களைவதுடன், இந்த சமூகத்தின் மீது இறைவன் சாட்டியுள்ள கடைமைகளின் அடிப்படையில் மனித மனங்களை வென்றெடுக்கக் கூடியவர்களாய் மாறிட வேண்டிய இன்றியமையாத தேவையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.    

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 1, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்