Masjidhul Ihsaan - Coimbatore

முத்தலாக் தண்டனைச் சட்டம்..!!


இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் பஜாக அரசு முஸ்லிம் பெண்களை முத்தலாகில் இருந்து காத்திடுமாறு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அவசர கதியில் நான்கே மாதத்தில் ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதனை நிறைவேற்றியும் உள்ளது.

இந்த மசோதாவின் மூலம் மத்திய அரசு முஸ்லிம்களை அவர்களது மத சுதந்திரத்தின் அடிப்படையில் வாழ்வியலை அமைத்துக்கொள்வதில் இருந்து மாற்றி அவர்களை பொது குடும்பவியல் சட்டத்தின் பாதையில் மடை மாற்றிடும் திட்டத்தின் முன்னோட்டமாகவே இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

இதே உச்ச நீதிமன்றம் பாபர் மஸ்ஜித் வழக்கில் வழங்கிய தீர்ப்பை குறித்து இவர்கள் கூறுகையில் எங்களது மத நபிக்கைக்கு எதிரான எந்த தீர்ப்பையும் நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம் என்று கூறியவர்கள் இப்போது முஸ்லிம் பெண்களுக்கான நீதி வழங்கிட சட்டம் வரையறை மேற்கொள்ளலாம் என்ற உச்சாநீதிமன்ற ஆலோசனையை மட்டும் செயல்படுத்திட துடிப்பது அதன் ரெட்டை நிலையை தெளிவாக காட்டுகிறது. 

இதனினும் மேலாக குடும்பவியல் விவகாரங்களின் அடிப்படையில் இதற்கு சட்டம் இயற்றமால் இதனை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சிறை தண்டனை என கூறியிருப்பதன் மூலம் இந்திய முஸ்லிம் பெண்களின் வாழ்வினை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த எதேச்சாதிகார அரசு.

இந்த சட்டத்தை இந்திய முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்வது, இதற்கான சுய விழிப்புணர்வை எவ்வாறு பெறுவது என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 29, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்