Masjidhul Ihsaan - Coimbatore

முஸ்லிம் சமூகத்தின் முகவரி..!!



கடந்த வார ஜுமுஆ உரையில் கூறப்பட்டது போல் இறைத்தொடர்பும் இறைநெறியில் வாழ்வினில் பிரதிபலிப்பதன் மூலம் குர்ஆன் கூறிடும் முகவரியினை அடைவதைக் குறித்து சிந்தித்தது போல, முஸ்லிம் சமூகம் ஒத்துமொத்ததிற்கும் இறைவன் தனது திருமறையில் “தேர்வு செய்யப்பட சமூகம்” மற்றும் “முன்மாதிரி சமூகம்” என முகவரி அளிப்பதைக் காண முடிகிறது.

இப்படியான முன்மாதிரி சமூகம் எவ்வாறான பண்புகளைக் கொண்டதாகவும் அதும் எவ்வாறு முழு மனித சமூகத்திற்கும் பயனுடைய சமூகமாக மாறிடும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: பிப்வரி 16, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...

https://drive.google.com/file/d/1AP-AeUO7XhqFh2lmVqo86zxgdxUwhe0o/view?usp=sharing


முஸ்லிமின் முகவரி..!!


உலகில் உள்ள அத்துனை மனிதனும் தான் குடியிருக்கும் முகவரியை எப்போது கேட்டாலும் சொல்ல முடியும். ஆனால், ஒரு இறைநம்பிக்கையாளனாக அவரது முகவரியினை கேட்டல் அதற்கான பதில் பெரிய கேள்விக்குறியாகவே வெளிப்படும்.

இப்படியான சூழலில் ஒரு முஸ்லிமாக தான் யார் என்று அறிந்துகொள்வதுடன் அந்த முகவரியை தவறிவிடாமல் பாதுகாத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: பிப்வரி 9, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...


இலக்கும் அதனை அடையும் வழிமுறைகளும்..!!



மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளின் அடிப்படையில் பல வகையான இலக்குகளும் நோக்கங்களும் இருப்பது இயல்பு. அந்த இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்திடும் வழிமுறைகளில் தான் வித்தியாசம் இருக்கிறது. வழிமுறைகள் எதுவாகிலும் சென்றடையும் இடம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என பாமரத்தனமான ஒரு கண்ணோட்டத்தில் இன்றைய கால மக்கள் தங்களது இலக்கை அணுகுவது சமூகத்தில் எவ்வாறான குழப்பங்களையும் சீர்கேட்டையும் வளர்க்கிறது என்பதனைக் குறித்து இவர்களுக்கு எவ்வித குற்ற உணர்வும் இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கும் ஒன்று.

இந்த சூழலில் மக்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு எவ்வாறான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: பிப்வரி 2, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...

https://drive.google.com/file/d/16WF2puw4ZptYJQ8Ts3tw4Q4DUqPq-LWA


ஆன்மாவின் ஆரோக்கியத்தின் அவசியம்..!!


நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஒரு உருப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டில் அமையும் என்றால் அது இதயத்தின் செயல்பாட்டினை குறிக்கும். அதேபோல நமது வாழ்வும் சிந்தனைகளும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்றால்    என்ற ஆன்மா ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

நமது ஆன்மாவினை சீர்படுத்துவதன் இன்றியமையாத நோக்கம் மற்றும் அதனை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துகொள்வது என்பதைக் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஜனவரி 26, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...